Monday, May 6, 2024

ஆன்லைன் கேம் விளையாடியதால் விபரீதம் – கல்லூரி மாணவர் தற்கொலை..!!

Must Read

ஆன்லைன் கேம் மூலமாக பணத்தை இழந்த கல்லூரி வாலிபர் ஒருவர் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி மாணவர்:

சென்னையில் உள்ள டி.டி சத்திர பகுதியை சேர்ந்தவர், நிதிஷ்குமார். அவர் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்து உள்ளார். கல்லூரியில் இளங்கலை 3 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர். கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், வீட்டில் தான் நிதிஷ் அதிகமாக இருந்துள்ளார். அவர், சில நேரங்களில் டாட்டூ எனப்படும் பச்சை குத்தும் தொழிலையும் பகுதி நேரமாக செய்து வந்து உள்ளார்.

boy suicide in chennai due to online games
boy suicide in chennai due to online games

இதற்கிடையில், நேற்று வேளைக்கு சென்ற நிதிஷ் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கடைக்கு சென்று பார்த்து உள்ளனர், அங்கு அவரது பைக் இருந்து உள்ளது. ஆனால், கடை உள்பக்கமாக தாழ்பாள் போட்டு இருந்ததால், தட்டி பார்த்து உள்ளனர், ஆனால், நிதிஷ் பதில் அளிக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நிதிஷ் தூக்கில் தற்கொலை செய்து உள்ளார், என்று தெரிந்து உள்ளது. மேஜையில், அவர் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் இருந்து உள்ளது .

ஆன்லைன் அசுரன்:

பல திடுக்கிடும் தகவல்கள் விசாரித்து பார்த்தபோது தெரியவந்துள்ளது. இவர் தனது ஓய்வு நேரங்களில், ஆன்லைன் கேம் எனப்படும் ரம்மி சர்க்கிள், பப்ஜி, ஐ.பி.எல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது இவரது பொழுதுபோக்கு. அப்படி விளையாடியதில் இவர் பணத்தை இழந்து உள்ளார், மேலும் கடையில் இருந்த பணத்தையும் எடுத்து விளையாடி உள்ளார்.

rummy circle game
rummy circle game

 

அதிலும் தோல்வி அடைந்ததால் விரக்தியில் தற்கொலை செய்து உள்ளார். அவர் தனது கடிதத்தில், “தற்கொலை தவறுதான் ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. அம்மா, அப்பா மற்றும் காதலி மூவருக்கும் என் மன்னிப்புகள்” என்று உருக்கமாக தெரிவித்து உள்ளார்.

மேலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -