Wednesday, May 8, 2024

காப்பீடு இருந்தால் கட்டணம் இல்லை – அரசு அதிரடி

Must Read

மருத்துவ காப்பீடு பெற்றிருந்தால் கொரோனா நோயாளிகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்க அரசு புதிய ஆணை வெளியிட்டுள்ளது.

முதல் கட்டண நிர்ணய ஆணை

ஜூன் 15 அன்று, தனியார் மருத்துவமனைகளுக்கு, கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்து ஆணை வெளியிட்டது அரசு. அதில் பல்வேறு கருத்துக்கள் இருந்த நிலையில் அதனை திருத்தும் விதமாக ஜூலை 6 அன்று, பல்வேறு மாற்றங்களை கொண்டு புதிய ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க 70 வருடங்களில் முதல் முறையாக திட்ட அறிக்கை நிராகரிப்பு

மருந்துகள் இல்லை:

முதல் ஆணையில் நாளொன்றுக்கு, வழக்கமான வார்ட் மற்றும் தனிமைப்படுத்துதலுக்கு 4000 ரூபாயும், செயற்கை உயிர்ப்பு அமைப்பு அல்லாத ICU மற்றும் தனிமைப்படுத்துதலுக்கு 7500 ரூபாயும், செயற்கை உயிர்ப்பு அமைப்பு கூடிய ICU மற்றும் தனிமைப்படுத்துதலுக்கு 9000 ரூபாயும் கட்டணமாக பெற தெரிவிக்கப்பட்டது.

இதனில், மருந்துகள், X- Ray, ரத்த பரிசோதனை மற்றும் மருத்துவர் ஆலோசனை ஆகியவை அடங்கும். அதனில், MRI, CT ஸ்கேன் மற்றும் கொரோனா பரிசோதனை கட்டணம் அடங்கவில்லை. ஆனால், ஜூலை 6 அன்று வெளியிடப்பட்ட இரண்டாவது ஆணையில் மருந்துகள் விலக்கப்பட்டுள்ளன.

காப்பீட்டாளர்களுக்கு கட்டணம் இல்லை

மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஏதேனும் காப்பீடு இருந்தால், அவர்களுக்கு அக்காப்பீடு முடியும் வரை எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனையுடன் ஏதேனும் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தாலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவிக்க பட்டுள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -