Saturday, April 20, 2024

70 வருடங்களில் முதல் முறையாக திட்ட அறிக்கை நிராகரிப்பு

Must Read

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட்டின் சட்டசபை கூட்டுவதற்கான திட்ட அறிக்கையை கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக கொரோன நோய் தொற்று வீரியம் கருதி நிராகரித்துள்ளார் ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா.

அசோக் கெலோட்டின் திட்ட அறிக்கை

உலகம் முழுவதும் கொரோனா தொற்று புயல் போல் பரவி வரும் நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட், ஆகஸ்ட் 6-ல் வருகிறது SONY WF – 1000XM3 வயர்லெஸ் இயர்போன்கள்!!

சட்டசபை கூடுவதற்கான திட்ட அறிக்கையை ஆளுநர் கல்ராஜ் மிஷ்ராஜிடம் நேற்று அளித்துள்ளார்.

ஆனால், அவ்வறிக்கை இன்று ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அவசர காலத்தில், அனைத்து MLA – க்களை அழைப்பது சாத்தியம் இல்லை என்றும், திட்ட அறிக்கையில் சில தெளிவாக்கங்கள் வேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் முறையாக நிராகரிப்பு

எழுபது வருடங்களில் சட்டசபை கூடுவதற்கான திட்ட அறிக்கை ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

மேலும், ஆளும் கட்சி சட்டசபையை கூட்ட எண்ணினால், அதற்கு ஆளுநர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். அவை மட்டுமில்லாமல், பிஜேபியின் அழுத்தத்தினாலே, ஆளுநர் சட்டசபையைக் கூட்ட தாமதிக்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

முதல்வரின் குற்றசாட்டு

இது குறித்து இரண்டாவது முறையாக, முதல்வர் பிரதம மந்திரி நரேந்திர மோடியுடன் இன்று பேசியுள்ளார். அப்போது, திட்ட அறிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்தது குறித்த விவரதினை கெலோட் சுட்டி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தனக்கு ஆறு பக்கத்தில், அர்த்தம் இல்லா கடிதத்தையும் ஆளுநர் அனுப்பியுள்ளார் என்று பிரதமரிடம் கெலோட் தெரிவித்துள்ளார். இது அரசியல் சார்ந்த சுழலில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -