Thursday, April 25, 2024

இன்றைய தலைப்புச் செய்திகளின் சுருக்கம்..!! தவறாமல் படிங்க!!

Must Read

இன்றைய செய்திகளின் சுருக்கம்..

தேசிய செய்திகள்

இந்தியாவில் அமலுக்கு வரும் ‘அன்லாக் 3.0’ – என்னென்ன தளர்வுகள்??

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில் ஜூலை 31ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு (அன்லாக் 3.0) சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

PUBG உட்பட மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு திட்டம்!!

PUBG உட்பட மேலும் 275 சீன செயலிகள் தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டு உள்ளது. இதனால் இந்த செயலிகளும் விரைவில் தடை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

யுஜிசி வழிகாட்டுதல்கள் மற்றும் இறுதியாண்டு தேர்வுகள் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (யுஜிசி) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் இறுதி ஆண்டு தேர்வுகள் குறித்து இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, கொரோனா பரவலின் போது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு அல்லது இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த கட்டாயப்படுத்த கோரப்பட்ட மனுக்கள் விசாரிக்கப்பட உள்ளன.

ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு அதிநவீன கொரோனா பரிசோதனை – பிரதமர் துவக்கி வைக்கிறார்!!

ஒரே நாளில் 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யக்கூடிய அதிநவீன பரிசோதனை மையங்களை காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைக்கிறார்.

மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் ஜூலை 31ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம் – முதல்வர் துவக்கிவைப்பு!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மருத்துவப்படிப்படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்..!!

மருத்துவ படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும் ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு எந்த தடையும் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஆன்லைனில் காவலர் தேர்வு?? சீருடைப் பணியாளர் தேர்வாணையம் திட்டம்!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தனியார் நிறுவன உதவியுடன் காவலர் தேர்வினை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து பரிந்துரைகள் கேட்கப்பட்டு உள்ளது.

தங்க நிலவரம்

சவரன் 40 ஆயிரத்தை தொடும் தங்கத்தின் விலை – உறைந்து போன மக்கள்!!

 தங்கத்தின் விலை கிராமுக்கு 74 ரூபாய் அதிகரித்து 4,978 ரூபாய்க்கும், ஒரு சவரன் 592 ரூபாய் அதிகரித்து ரூ. 39,824 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3.90 அதிகரித்து ரூ.70.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகம்

ரஷ்யாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி சோதனை தொடக்கம்..!

ரஷ்யாவில் மனிதர்களுக்கு இடையே இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று ஜூலை 27 துவங்கப்படுகிறது.

வானிலை செய்திகள்

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..!!

இன்று வானிலை கூறியிருக்கும் அறிக்கையில் தமிழகத்தில் பரவலாக 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -