Saturday, May 18, 2024

இந்தியாவிற்க்குப் புறப்பட்ட ரஃபேல் ஜெட் விமானங்கள்!!!

Must Read

இந்தியாவின் பாதுகாப்பு திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து இன்று முதல்கட்ட 5 ரஃபேல் ஜெட் விமானங்கள் புறப்பட்டுள்ளன.

முதல்கட்ட ரஃபேல் ஜெட் விமானங்கள்:

இந்தியாவின் பாதுகாப்பு திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து இன்று முதல்கட்ட 5 ரஃபேல் ஜெட் விமானங்கள் புறப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் 29ம் தேதி இந்தியா வந்து சேரும்.

இதையடுத்து, ஹரியானாவின் அம்பாலாவின் உள்ள இந்திய விமானப்படையில் அந்த விமானங்கள் சேர்க்கப்படும். அது UAE -ல் எரிபொருள் நிரப்பப்பட்டு அம்பாலா வந்தடையும் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா புறப்பட்டது!

விமானம் இந்திய வருகை :

இந்த விமானம் புதன்கிழமை அன்று இந்திய விமானப்படையில் (ஐ.ஏ.எஃப்) சேர்க்கப்படும், வரவேற்பு விழா ஆகஸ்ட் இரண்டாம் பாதியில் நடைபெறும்.

இது தெரியுமா??? ⇛⇛⇛ எளிய முறையில் உடல் எடை குறைக்க உதவும் சாதம்!!

பன்னிரண்டு இந்திய விமானப்படை விமானிகள் மற்றும் பொறியியல் குழு உறுப்பினர்கள் ரஃபேல் ஜெட் போர் விமானங்களில் பயிற்சி பெற்றவர்கள் இந்த ஜெட் விமானத்தை இயக்கி வருகின்றனர்.

ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு வரும்போது இந்தியா விமானப்படைகளில் முன்னணியில் இருக்கும் என்றும் அவர் விளக்கினார்.

இந்திய பிரான்ஸ் ஒப்பந்தம் :

36 ரஃபேல் போர் விமானங்களை ரூ .58,000 கோடிக்கு வாங்க இந்தியா 2016 ல் பிரான்சுடன் அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மேலும், 2021 இறுதிக்குள் 36 ஜெட் விமானங்களும் ஒப்படைக்கப்படும். இதில், தற்போது 10 விமானங்களுக்கான பணி திட்டமிட்டபடி முடிக்கப்பட்டுள்ளது. 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலே இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மும்பை அணி  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -