Monday, May 6, 2024

இந்தியாவின் “டெக் மேக்னட்” விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜி – பிறந்த தினம் இன்று..!!

Must Read

இந்தியாவின் “டெக் மேக்னட்” என்று அழைக்கப்படும் விப்ரோ நிறுவனத்தின் தலைவர், ஆசிம் பிரேம்ஜி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

புலிக்கு பிறந்தது பூனையா??

மஹாராஷ்டிராவில் உள்ள ஜல்கோன் என்ற சிறிய கிராமத்தில் முகமது ஆசிம் பிரேம்ஜி என்பவருக்கு 1945 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை, அந்த கிராமத்தில் ஒரு சிறிய எண்ணெய் பிசினஸ் நடத்தி வந்து உள்ளார். இவரது தந்தை சிறந்த பிசினஸ் செய்து வந்து உள்ளார். “ரைஸ் கிங் ஒப் பர்மா” என்று அந்த காலத்தில் பெயர் பெற்று உள்ளார். அதே போல் தான் இவரது மகனும், தற்போது இந்தியாவின் சிறந்த பிசினஸ் செய்பவராக உள்ளார்.

ஜெயலலிதாவின் வீட்டை கைப்பற்ற ரூ. 68 கோடி – நீதிமன்றத்தில் செலுத்தியது தமிழக அரசு..!

Azim Premji,
Azim Premji,

இவர் தனது சிறுவயதில் இருந்தே நன்றாக படித்து வந்து உள்ளார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழத்தில் இவர் படித்து கொண்டு இருந்த பொது இவரது தந்தை எதிர்பாராத வண்ணம் இறந்து உள்ளார், அதனால் பிரேம்ஜி தனது படைப்பை பாதியில் நிறுத்திவிட்டு தங்கள் குடும்ப தொழில் ஆன எண்ணெய் தொழிலில் இறங்கி உள்ளார். பின்பு, 30 ஆண்டுகளுக்கு பிறகு, தனது எலக்ட்ரிகல் பொறியியல் படிப்பை முடித்து உள்ளார்.

எப்படி வந்தது விப்ரோ :

இப்படி தனது தந்தை விட்டு சென்ற தொழிலை மட்டும் செய்யாமல், புதிதாக அதில் நிறைய மாற்றங்களையும், யுக்திகளையும் கொண்டு வந்து உள்ளார். தனது நிறுவனத்திற்கு விப்ரோ என்று பெயரை மாற்றி உள்ளார். பெயர் மாற்றத்திற்கு பிறகு, விப்ரோ நிறுவனம், அமெரிக்காவை தலமாக கொண்ட சென்டினல் என்ற நிறுவனத்துடன் நடந்த ஒப்பந்தத்தின் பெயரில் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்தல் மற்றும் அதன் செயல்பாடுகளை கவனித்தல் மற்றும் மென்பொருள் தீர்வுகள் வழங்கும் நிறுவனமாக விப்ரோ உருவெடுத்தது.

 

Wipro and Azim Premji
Wipro and Azim Premji

இதன் மூலம், 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய மென்பொருள் சோதனை ஆய்வகத்திலிருந்து ஒய் 2 கே-இணக்க சான்றிதழை ஒரே ஆனது, விப்ரோ. இன்றைய நிலவரப்படி, விப்ரோ நிறுவனத்தின் ரியல் டைம் நிகர மதிப்பு 6.6 பில்லியன் டாலராக உள்ளது.

பிரேம்ஜி எப்படிப்பட்டவர்??

பிரேம்ஜி மிகவும் எளிமையான மனிதர், ஆனால் மிகவும் பெரிதாக சிந்திக்கும் மனிதர் அவர். அவர் ” ஆசிம் பிரேம்ஜி பௌன்டேஷன்” என்று ஒரு அமைப்பை நடத்துகிறார். அதில், தற்போது, கொரோனா நிதியாக 21 பில்லியன் உள்ளார். இதன் மூலம், அவரது பெரிய மனதை காட்டினார். இந்த கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலார்களை பெட்ரி உருக்கமாக “எகனாமிக் டைம்ஸ்” இல் எழுதி உள்ளார், குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -