ஜெயலலிதாவின் வீட்டை கைப்பற்ற ரூ. 68 கோடி – நீதிமன்றத்தில் செலுத்தியது தமிழக அரசு..!

0

ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வீட்டிற்கான இழப்பீட்டு தொகை ரூ. 68 கோடியை செலுத்தியது தமிழக அரசு.

ஜெ., வீட்டை கைப்பற்ற ரூ. 68 கோடி செலுத்திய அரசு..!

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இந்த வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என தீர்மானிப்பட்டது. ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களான அவரது அண்ணன் மகள் தீபா அவரது சகோதரர் தீபக் ஆகியோர் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை சார்பில் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி 36.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நில அளவீட்டு கட்டணம் 40 மடங்கு உயர்வு – தமிழக அரசு உத்தரவு..!

இந்நிலையில், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வீட்டை கையகப்படுத்துவதற்காக வீட்டிற்கான இழப்பீட்டு தொகையான 67.90 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் அரசு செலுத்த வேண்டும் என நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டதையடுத்து ரூ. 68 கோடியை செலுத்தியது தமிழக அரசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here