நில அளவீட்டு கட்டணம் 40 மடங்கு உயர்வு – தமிழக அரசு உத்தரவு..!

0

தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நில அளவீட்டு கட்டணம் உயர்வு..!

நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான கட்டணத்தை உயர்த்தி வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். புல அளவீட்டு புத்தக பிரதி ஏ4 அளவு ரூ.20ல் இருந்து ரூ.50 ஆகவும், ஏ3 அளவு ரூ.100 ஆகவும், புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆகவும், கோணமானியை பயன்படுத்தி பக்க எல்லைகளை சுட்டிக்காட்டுதல் ரூ.30ல் இருந்து ரூ.300 ஆகவும், நில அளவரின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு ஒரு பக்க எல்லைக்கான கட்டணம் ரூ50ல் இருந்து ரூ400 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது.

உட்பிரிவு மற்றும் பாகப்பிரிவினைக்கு முன்னர் நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்டுவதற்கான கட்டணம் புன்செய் நிலம் ரூ30ல் இருந்து ரூ1000 ஆகவும், நன்செய் நிலம் ரூ50ல் இருந்து ரூ2 ஆயிரம் ஆகவும், மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீட்டுக்கான கட்டணம் புன்செய் நிலம் ரூ60ல் இருந்து ரூ2 ஆயிரம் ஆகவும், நன்செய் நிலம் ரூ60ல் இருந்து ரூ4 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜூலை 31க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு?? பிரதமர் மோடி ஆலோசனை!!

நில அளவை குறியீட்டின் தொகை செலவினங்களுக்கான கூடுதல் கட்டணம் 400 சதவீதத்தில் இருந்து 800 சதவீதம் ஆகவும், மாவட்ட வரைபடம் (வண்ணம்) ரூ189ல் இருந்து ரூ500 ஆகவும், மாவட்ட வரைபடம் ரூ51ல் இருந்து ரூ300 ஆகவும், வட்ட வரைபடம் ரூ357ல் இருந்து ரூ1000 ஆகவும், வட்ட வரைபடம் ரூ51ல் இருந்து ரூ500 ஆகவும், நகரம் பிளாக் வரைபடங்கள் ரூ27ல் இருந்து ரூ50 ஆகவும், கிராம வரைபடம் ரூ85ல் இருந்து ரூ200 ஆகவும், உட்பிரிவு கட்டணம் கிராமப்புறத்தில் ரூ40ல் இருந்து ரூ400 ஆகவும், நகராட்சி பகுதிகளில் ரூ50ல் இருந்து ரூ500 ஆகவும், மாநகராட்சிகளில் ரூ60ல் இருந்து ரூ600 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தமிழகத்தில் பல மடங்கு மின்கட்டணத்தால் பொதுமக்கள் துவண்டு போயுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் நில அளவை கட்டணமும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here