Sunday, May 5, 2024

இன்றைய முக்கியச் செய்திகள் – சில வரிகளில்!!

Must Read

இன்றைய முக்கியச் செய்திகள்

  1. இந்தியாவில் வரும் நவம்பர் மாதத்திற்குள் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் எனவும் விலை 1000 ரூபாயாக இருக்கும் என சீரம் நிறுவன தலைவர் தெரிவித்து உள்ளார்.
  2. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 544 ரூபாய் அதிகரித்து 38,280 ரூபாயாக உயர்ந்தது.
  3. தென் ஆப்ரிக்க நாட்டிற்கு 20 மெட்ரிக் டன் அதிகமான மலேரியா மருந்தினை இந்தியா அனுப்பி வைத்து உள்ளது.
  4. கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்ட கருப்பர் கூட்டம் எனும் யூ டியூப் விடீயோக்களை நீக்கி அவர்களை கைது செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
  5. இந்தியாவில் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் நடைமுறையை டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
  6. செப்டம்பர் 5ம் தேதி முதல் ஆந்திர மாநிலத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
  7. அமெரிக்காவில் நடைபெறும் கொரோனா வைரஸ் பரிசோதனை குறிப்புகளை சீன நாட்டைச் சேர்ந்த ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
  8. பிரபல பஜாஜ் நிதி நிறுவனத்தின் பங்குகள் தீடிரென சரிந்த நிலையில் அதன் தலைவர் ராகுல் பஜாஜ் பதவி விலக இருப்பதாக அறிவித்து உள்ளார்.
  9. ராஜபாளையம் திமுக எம்எல்ஏ.,விற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது அக்கட்சி தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
  10. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  11. தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு குவாஹாத்தி சிறையில் உள்ள டெல்லி மாணவர் ஆர்வலர் ஷர்ஜீல் இமாம்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
  12. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் கூட்டு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளது.
  13. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது குறித்து இன்னும் தமிழக ஆளுநர் முடிவு செய்யாததற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
  14. பிரபல மூத்த தமிழ் எழுத்தாளர் கோவை ஞானி இன்று காலமானார்.
  15. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். 10ம் வகுப்பு ரிசல்ட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறியுள்ளார்.
  16. சர்வேதச விமான பயணிகளை 7 நாட்கள் கட்டாய தனிமைக்கு உட்படுத்த டெல்லி விமான நிலையம் முடிவு செய்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -