ஐசிசியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னபாக, இங்கிலாந்து அணியானது அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், அயர்லாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில், இங்கிலாந்தின் ஜோ ரூட் 56 ரன்கள் எடுத்ததன் மூலம் 11,000 ரன்களை கடந்த டாப் 10 கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் இணைந்துள்ளார்.
அட்ரா சக்க.., ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் டும் டும் டும் – அட மாப்பிள்ளை இவர் தானா?
அதாவது, அதிவேகமாக குறைந்த இன்னிங்ஸில் 11000 ரன்களை கடந்த டாப் 10 வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். குமார் சங்ககரா, பிரையன் லாரா (213), ரிக்கி பாண்டிங் (222), சச்சின் டெண்டுல்கர் (223), ராகுல் ட்ராவிட் (234), ஐக்யூஸ் கல்லிஸ் (234), மஹேல ஜயவர்தன (237), ஜோ ரூட் (238), அலஸ்டர் குக் (252), சிவநாராயணன் சந்தர்பால் (256) இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்