கோலிவுட் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்தி.இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பு கிடைத்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதை தொடர்ந்து இவர் தனது 27வது படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இதை 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கவுள்ளார். மேலும் இதனை சூர்யாவின் 2D படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் வில்லனாக நடிக்க நடிகர் அரவிந்த் சாமி ஒப்பந்தமாகி இருப்பதாக தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா ரயில் கோர விபத்து சம்பவம்.., ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு முடிவு!!
அதாவது இவர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கான ஷூட்டிங் பணிகள் முடிந்த நிலையில், தற்போது கார்த்தியுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் இவர்களின் ரசிகர்களின் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.