ஒடிசா ரயில் கோர விபத்து சம்பவம்.., ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு முடிவு!!

0
ஒடிசா ரயில் கோர விபத்து சம்பவம்.., ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு முடிவு!!
ஒடிசா ரயில் கோர விபத்து சம்பவம்.., ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு முடிவு!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் நேற்று (ஜூன் 2) இரவு 7 மணியளவில், ஒடிசா மாநிலம் பஜனகா ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்நிலையில் அதே வழியாக வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி 17 பெட்டிகள் தடம் புரண்டன. இடிபாடுகளில் சிக்கி 900க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆகவும் உயர்ந்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை மீட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 3 IAS அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒடிசாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

WTC 2023: இறுதிப் போட்டியில் இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை…, முன்னாள் பயிற்சியாளர் ஓபன் டாக்!!

இந்நிலையில் இந்த கோர ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அளிக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த தமிழர்களின் குடும்ப நலன் கருதி ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here