துப்பாக்கி படம் வெளியாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் அந்த படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் எனக் கூறியுள்ளார்.
விஜய்யின் ‘துப்பாக்கி’..!
முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் 2012ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் துப்பாக்கி. இந்த படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 100 கோடி வசூலை பெற்று அசத்திய மாபெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படம். இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்தை கலைபுலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.
அக்ஷரா கவுடா.!
இந்நிலையில் அக்ஷரா கவுடா இந்த படத்தில் நடித்ததிற்காக வருத்தப்படுகிறேன் என கூறியுள்ளார். துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால், விஜய்க்கு பெண் பார்த்ததாக கூறி அக்ஷரா கவுடாவை அழைத்து வருவார். அதில் அவர் ஒரு கில்மா பட நடிகை போல கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். முதலில் முருகதாஸ் காஜல் அகர்வாலுக்கு தோழி கதாபாத்திரம் என்று தான் அழைத்துச் சென்றாராம். அதன் பிறகு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விட்டார் என புலம்புகிறார்.
எனது வருங்கால கணவர் இப்படிதான் இருக்க வேண்டும் – ரகுல் ப்ரீத் சிங் Open Talk..!
அதனாலேயே தனக்கு நிறைய பட வாய்ப்புகள் வராமல் போய் விட்டது எனவும் இருந்தாலும் முருகதாஸ் மீது தனக்கு வருத்தம் இல்லை எனவும் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார். வாய்ப்பு வேண்டும் என்றால் நேரடியாக கேட்க வேண்டியதுதானே அதற்கு எதற்கு இப்படி ஒரு தகவலைக் கொடுக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவரை திட்டி வருகின்றனர்.