இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாநகரம்’. நடிகர்கள் ஶ்ரீ, சந்தீப் கிருஷ்ணன், ரெஜினா, சார்லி, அருண் அலெக்சான்டர் மற்றும் தீனா ஆகியோரது நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகளைப் பெற்றது. இதையடுத்து, இந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதாக அறிவிப்புகள் வெளியானது.
அந்த வகையில், ‘மும்பைக்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ள மாநகரம் படத்தில் ரீமேக் திரைப்படத்தை சந்தோஷ் சிவன் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸி, தான்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜியோ பிக்சர்ஸ் மற்றும் HR பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
சிலிண்டர் பெறுவதற்கு ரூ.3,500 கட்டணம்., அதிர்ந்த இல்லத்தரசிகள்!!!
இப்போது, நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மும்பைகர்’ திரைப்படம் ஜூன் மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நேரடியாக ஜியோ சினிமா OTT தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.