நோவா லைல்ஸ் போல்ட்டின் 200 மீ சாதனையை முறியடித்தார் – பின்னர் அவர் 185 மீ மட்டும் தான் ஓடியதைக் கண்டுபிடித்தனர்!!

0

உசைன் போல்டின் சாதனையை முறியடித்ததாக கூறப்பட்ட நிலையில், போட்டி ஏற்பாட்டாளர்களின் தவறு காரணமாக அவர் 185 மீட்டர் ஓடினார் என்பது தெரியவந்ததை அடுத்து, அமெரிக்காவின் நோவாலைல்ஸ்கு 200 மீட்டர் உலக சாதனை மறுக்கப்பட்டது.

தடகள சாதனை:

22 வயதான 200 மீட்டர் உலக சாம்பியன் வியாழக்கிழமை அன்று ஓடிய பந்தயத்தில் 18.90 வினாடிகளில் முடிவில் கோட்டை கடந்தார். இது ஜமைக்காவின் சிறந்த உசேன் போல்ட் 2009 இல் நிர்ணயித்த 19.19 வினாடி சாதனையை விட இது அதிகமாக இருந்திருக்கும். அவரது தனிப்பட்ட சிறந்தநேரம் 19.50 வினாடிகள் ஆகும்.

மைக் ஹசி-யின் ஐபிஎல் XI அணி – தல தோனி தான் கேப்டன்!!

உலக சாம்பியனான லைல்ஸ் பின்னர் ட்வீட் செய்தார்: அதில் “நீங்கள் என் உணர்ச்சிகளுடன் இதுபோன்று விளையாட முடியாது. என்னை தவறான பாதையில் அழைத்துச் சென்றது.” பின்னர் அவர் மீண்டும் ட்வீட் செய்தார், உண்மையில் அவர்தவறான பாதையில் தொடங்கினார் என்று கூறினார். இன்ஸ்பிரேஷன்கேம்ஸ் அமைப்பாளர்களுக்கு இந்தநிகழ்வு ஒரு பெரிய சங்கடமாக இருக்கும். மேலும் கொரோனா காரணமாக தரமான பயிற்சி நேரம் மற்றும் வசதிகள் இல்லாதது சில நிகழ்ச்சிகளில் காட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here