சீனாவின் குய்சொ-11 ராக்கெட் – விண்ணில் ஏவப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் நடுவானில் வெடித்துச் சிதறியது..!

0

சீனாவின் அதி நவீன ராக்கெட்டான குய்சொ 11 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட ஒரு சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.

சீனா முயற்சி தோல்வி..!

சீனாவின் வெற்றிகரமான ராக்கெட் குய்சோ-1ஏ இதை மேம்படுத்தி அதி நவீன தொழில் நுட்பத்தில் புதிய ராக்கெட் தயாரிக்கப்பட்டது சீனா. இதற்கு குய்சோ 11 என்று பெயர் சூட்டப்பட்ட்டது.

சென்டி ஸ்பேஸ் 1 எஸ் 2, ஜுலின் 1 கஃபன் – 02இ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்கள் குய்சோ 11 ராக்கெட்டுடன் விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்த சீனா திட்டமிட்டிருந்தது.

கொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடியை இந்திய சந்தித்து வருகிறது – ரிசர்வ் வங்கி ஆளுநர்..!

2015ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குய்சோ 11 ராக்கெட் 2018 ம் ஆண்டே விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் ராக்கெட் ஏவும் நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் குறைந்த செலவில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த குய்சோ 11 ராக்கெட் நேற்று பெய்ஜிங் நேரப்படி 12:17 க்கு விண்ணில் ஏவப்பட்டது.

தொழில் நுட்பக் கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறி சீன விஞ்ஞானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில் நுட்ப காரணங்களால் ராக்கெட் வெடித்துச் சிதறியிருக்கலாம். சரியான காரணத்தைக் கண்டறிய ஆய்வு செய்து வருகிறோம் என்று என்று ஜியுகுவான் விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here