தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

0
Minister Sengottaiyan
Minister Sengottaiyan

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது இருக்கும் சூழ்நிலையில் சிந்திக்கவே கூட நேரம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன்..!

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புதிய உணவகத்தை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவதை 14ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு அதை எந்த வகையில் மாணவர்களுக்குப் புத்தகப்பையோடு வழங்கலாம் என்று ஆய்வு நடத்தக் குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஆய்வு நடத்தி எங்களுக்கு தெரிவித்தவுடன் எப்படி வழங்குவது என்பது முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இதையடுத்து ஆன்லைன் வகுப்புகளுக்காக மடிக்கணினி வரவேண்டும் என அறிவித்துள்ளார்களே என்ற கேள்வி எழுந்ததை அடுத்து அதற்கு பதில் அளித்த அமைச்சர், இதுவரையிலும் இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இ-பாக்ஸ் எனும் நிறுவனத்தின் மூலமாக முதல்வர் அதை 14ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அவர் தொடங்கி வைத்தவுடன் புதிய வரலாற்றைப் படைக்கும் விதமாக அமையும்.

அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து – மாநில துணை முதல்வர் அறிவிப்பு!!

மேலும் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து 18 பேர் கொண்ட குழு வரும் 13ல் அறிக்கை தாக்கல் செய்கிறது. இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 30 சதவீத பாடம் குறைக்கப்பட்ட பின் பல்வேறு விமர்சனம் எழுந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை எனவும் சென்னையை பொறுத்தவரை அனைவரும் ஆன்லைன் கல்வி கற்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here