Friday, June 14, 2024

இந்தியாவை சுற்றிவளைக்க சீனா திட்டம் – கைகோர்க்கிறது பாகிஸ்தானுடன்.. !

Must Read

லடாக் பிரச்சனையே இன்னும் முடிவு பெறாத நிலையில் சீன அரசு ராஜஸ்தான் எல்லை பகுதியை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லடாக் பகுதி:

கடந்த சில நாட்களுக்கு முன்னால் சீன ராணுவம் நம் எல்லை பகுதியான லடாக் பகுதியில் அத்துமீறி உள்நுழைந்து மோதலை ஏற்படுத்தியது. இதனால் நம் ராணுவ வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர்.

india china ladakh problem
india china ladakh problem

இந்த பிரச்சனையே இன்னும் முடியவில்லை, பனி போர் போல் அவர்கள் தங்கள் ஆயுதங்களை நிறுத்தி வருகின்றனர். இது இப்படி இருக்க சீனா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மாரை ஒட்டிய இந்திய எல்லை பகுதிகளுக்கும் குறி வைத்து உள்ளது.

சுற்றிவளைத்த சீனா:

ராட்க்ளிஃப் லைன்,என்பது நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள எல்லை பகுதி ஆகும். பாக்கிஸ்தான் இங்கு சாலை அமைக்க சீன அரசு உதவி வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

china join hands with pakistan
china join hands with pakistan

இங்கு விமான சேவை, ரயில் சேவை மற்றும் பல விஷயங்களுக்காக சீன அரசு ரூபாய் ரூபாய் 30 கோடியை முதலீடு செய்து உள்ளது. கட்டுமான பணிகளுக்காக 30 சீன நிறுவனங்களையும் நிறுத்தி உள்ளது.

அகழாய்வு பணிகள்:

இந்த எல்லை பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை செயல் படுத்தவும் சீனா முடிவு செய்து உள்ளது. 8 கிலோ மீட்டர் தூரத்திலேயே எண்ணெய்,எரிவாயு எடுக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. 2,500 சீன நிபுணர்களை இந்த பணிக்காக இறக்கி உள்ளது. தனது நிறுவனங்களின் பாதுகாப்புக்காக சொந்த பிராந்தியத்தையே சீனா உருவாக்கியுள்ளது.

oil mining
oil mining

மேலும், அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு எரிபொருட்களை வழங்கி தன்னை ராணுவ ரீதியாக பலப்படுத்தி வருகிறது. இதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று முன்னாள் ராணுவ அதிகாரிகள் கேட்டு கொண்டு உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

தமிழக அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -