கொரோனா தொற்று எதிரொலியால் தபால் வாக்குக்கான வயது வரம்பை 65-ஆக குறைப்பு – தேர்தல் ஆணையம்..!

0

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனி 65 வயது நபர்களும் தபால் ஓட்டு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் தபால் வாக்குக்கான வயது வரம்பை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மேலும் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தலில் 80 வயது பூர்த்தியானவர்கள் தபால் மூலம் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் 65 வயதானவர்கள் தபால் மூலம் ஓட்டளிக்கலாம் என மத்திய சட்டத்துறை அறிவித்துள்ளது.

65 வயதுக்கு மேலானவர்கள் வாக்களிக்கலாம்..!

கொரோனா வைரஸ் முதியவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதால் தபால் வாக்கு செலுத்துவோரின் வயது 80ல் இருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் அங்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் தபால் ஓட்டு போடலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here