அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

0
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!
தமிழக அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி உயர்வு, தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்தாண்டு அறிவித்து இருந்தார். அதன்படி தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1.1.2024 தேதி முதல் அகவிலைப்படியை 9 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு சேவை மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here