விஜய் டிவி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பாரதி கண்ணம்மா சீரியலின் பாகம் 2 ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் இந்த சீரியல் பாரதி கண்ணம்மா 1 ன் தொடர்ச்சியாக இருக்காது என இதன் ப்ரோமோவிற்கு பிறகு நமக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போஸ்ட் ஒன்றை செய்துள்ளார்.
அதாவது இதில் 2 கண்ணம்மா என்று குறிப்பிட்டு இரண்டு ஹீரோயின்கள் ஒரே மாதிரியான உடை அணிந்து பேருந்தில் பயணம் செய்து வருவது போல் அந்த புகைப்படம் அமைந்திருந்தது. இதை வைத்து பார்க்கும் போது இதில் ஒருவர் சித்ராவாகவும், மற்றொருவர் உண்மையான கண்ணமாவாகவும் இருப்பார் என்று தெரிய வருகிறது. மேலும் கண்ணம்மாவை மர்ம நபர்கள் கொலை செய்து விடுவதால் சித்ரா கேரக்டரில் நடிக்கும் வினுஷா கண்ணம்மாவாக இந்த தொடரில் நடிப்பார் என தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த சீரியலில் கண்ணம்மாவா கதாபாத்திரத்தில் நம்மில் பலருக்கு மிகவும் பிடித்தமான ‘ரேஷ்மா முரளிதரன்’ இதில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்த சீரியலில் 2 ஹீரோயின்கள் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடிப்பார்கள் என தெரியவருகிறது. இதுபோக ரேஷ்மா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சீரியலுக்கு எப்போ என்ட்ரி கொடுக்க போறீங்க என்ற ரசிகர்களின் கேள்விக்கு, ”i am very soon” என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ரேஷ்மா ஒரு சிறப்பு தோற்றத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பார் தெரியவருகிறது.