ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே முதல் படியை எட்டிய இலக்கிய சீரியல்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

சன் தொலைக்காட்சியில் அண்மையில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் இலக்கியா. இதில் ஹீரோயினாக இதயத்தை திருடாதே சீரியலில் நடித்த ஹேமா பிந்து இதில் நடிக்கிறார். மேலும் இதில் ஹீரோவாக நந்தன் லோகநாதன் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் பணக்கார வீட்டிற்கு மருமகளாக வந்து, அந்த குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தனியாக நின்று சமாளிப்பதை மையமாக வைத்து இந்த சீரியல் கதைக்களம் அமைகிறது. மேலும் இந்த சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவாக நடிக்கும் ரூபா ஸ்ரீ இதில் நடித்து வருகிறார்.

சூர்யா ஜோதிகாவின் மகள், மகன் எவளோ வளர்ந்துட்டாங்களா?? ஜோதிகாவே வெளியிட்ட ரீசென்ட் கிளிக்ஸ்!!

இந்நிலையில் இதன் ஹீரோயின் இலக்கியா மீதும், அவரின் குடும்பத்தார் மீதும் மிகுந்த அக்கறை மற்றும் பாசத்தை காட்டிவருகிறார் கணவர் கெளதம் . ஆனால் வில்லி பைரவி வீட்டில் ஏற்படுத்தும் குழப்பங்களால், கெளதம் மற்றும் இலக்கியாவிற்கும் இடையே அவ்வப்போது சண்டை வருகிறது. இப்படியான ஏகப்பட்ட டிவிஸ்டுகளுடன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக தனது 100 வது எபிசோடை எட்டியுள்ளது. இதனால் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here