பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்., ஆண்டுக்கு ரூ.72,000 பங்களிப்பு செய்வதாக அரசு உத்தரவு!!

0

டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்குவதற்காக, ஆண்டு ரூ.72,000 பங்களிப்பு செய்வதாக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு உத்தரவு:

நாடு முழுவதும், பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் சுவிதா சாரதி என்ற திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயிலும் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை கல்வி இயக்குனரகம் தொடங்கியுள்ளது.

10 பேக் அடங்கிய ரூ.30 மதிப்புள்ள சானிட்டரி நாப்கின்கள் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு, மாதந்தோறும் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது. இது குறித்து வெளியான சுற்றறிக்கையில், 200 மாணவிகள் படிக்கும் பள்ளியில் இந்த திட்டத்திற்கு ஆண்டு பங்களிப்பாக ரூபாய் 72000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போக இந்த திட்டத்தில் இணைய விரும்பும் பள்ளிகளை, அடையாளம் காண அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு நிர்ணயித்த எண்ணிக்கையில் மாணவிகள் இருந்தால், இத் திட்டத்தில் இணைய ஒப்புதல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here