கிளாஸ் லுக்கில் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலங்களில் ஒருவர் நடிகர் அஜித். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவுக்கு முக்கியமான பங்களிப்பை கொடுத்து வரும் நடிகர் அஜித்திற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வரவேற்புகளை பெற்றிருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
நடிகர் அஜித் மற்ற நடிகர், நடிகைகளை போல அல்லாமல் எப்போதும் கேமராவில் இருந்து விலகியே இருப்பார். அதனால், சினிமா தவிர மற்ற இடங்களில் அஜித்தை பார்ப்பது என்பது அரிதான காரியம் ஆகும். இந்த நிலையில், நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
‘தளபதி 67’ த்ரிஷாவுக்கும் ஸ்பெஷல் தான்…, எப்படி தெரியுமா?…,
அந்த வகையில், தற்போது நடிகர் அஜித்தின் சில கிளாசிக் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ஷாலினி அவரை தனது ‘சன் ஷைன்’ என்ற கேப்ஷனுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. இதற்கிடையில், நடிகர் அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக தளவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.