‘தளபதி 67’ த்ரிஷாவுக்கும் ஸ்பெஷல் தான்…, எப்படி தெரியுமா?…,

0
'தளபதி 67' த்ரிஷாவுக்கும் ஸ்பெஷல் தான்..., எப்படி தெரியுமா?...,
'தளபதி 67' த்ரிஷாவுக்கும் ஸ்பெஷல் தான்..., எப்படி தெரியுமா?...,

நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கும் ‘லியோ’ திரைப்படம் த்ரிஷாவுக்கும் ஸ்பெஷல் படமாக அமைந்துள்ளது.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் த்ரிஷா இன்னும் அதே போல இளமையாகவே காணப்படுகிறார். அதனால் தான் என்னவோ அவர் மார்க்கெட்டில் முதன்மை இடத்தை தனக்கென பிடித்து வைத்துள்ளார். சமீபத்தில், நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவதற்காக தயாராகியுள்ளார் த்ரிஷா. அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. இந்த திரைப்படம் விஜய் – த்ரிஷா ஜோடிக்கு 5 ஆவது திரைப்படம் ஆகும்.

அதே போல, இது நடிகர் விஜய் நடிக்கும் 67 ஆவது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் குறித்த சில அப்டேட்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில், ‘தளபதி 67’ நடிகர் விஜய்க்கு மட்டும் அல்ல நடிகை த்ரிஷாவுக்கும் ஸ்பெஷல் திரைப்படம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினியுடன் கை கோர்க்கும் பாலிவுட் வில்லன் – ‘ஜெயிலர்’ அப்டேட் வெளியீடு!!

அதாவது, ‘லியோ’ திரைப்படம் நடிகை த்ரிஷா நடிக்கும் 67 ஆவது திரைப்படமாம். அந்த வகையில் தமிழ், தெலுங்கு என த்ரிஷா இதுவரை சுமார் 65 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here