பொதுமக்களே உஷார்.., கோவில் பெயரில் போலி இணையதளம்.., பணத்தை இழந்த பக்தர்கள் கதறல்!!!

0
பொதுமக்களே உஷார்.., கோவில் பெயரில் போலி இணையதளம்.., பணத்தை இழந்த பக்தர்கள் கதறல்!!!
பொதுமக்களே உஷார்.., கோவில் பெயரில் போலி இணையதளம்.., பணத்தை இழந்த பக்தர்கள் கதறல்!!!

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இணையதளங்களில் அனுதினமும் மோசடி செயல்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது புது மோசடி ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது சமீப காலமாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் நடைபெறும் அபிஷேகம், அர்ச்சனை போன்ற விசேஷ பூஜைகளுக்கு கோவில் நிர்வாகம் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன் படி தற்போது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில மோசடி கும்பல் கோவில் பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி கியூ ஆர் கோடு மூலம் பணம் பெற்றுக் கொள்கிறது. இப்படியாக ஏமாற்றப்படும் பக்தர்களின் பணம் யாருக்கு செல்கிறது என்பதை கண்டறிய முடியவில்லை என ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Whatsapp குரூப்பில் கொண்டு வரப்பட்ட பிரத்யேக அப்டேட்., குஷியில் பயனர்கள்!!

வழக்கை பரிசீலித்த நீதிபதிகள், கோவில் பெயரில் தனி நபர்கள் தொடங்கிய போலி இணையதளங்களை முடக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here