பள்ளி மாணவர்களை வேறு பணிக்கு பயன்படுத்தக் கூடாது., மீறினால் நடவடிக்கை கன்ஃபார்ம்! அமைச்சர் வார்னிங்!!

0
பள்ளி மாணவர்களை வேறு பணிக்கு பயன்படுத்தக் கூடாது., மீறினால் நடவடிக்கை கன்ஃபார்ம்! அமைச்சர் வார்னிங்!!
பள்ளி மாணவர்களை வேறு பணிக்கு பயன்படுத்தக் கூடாது., மீறினால் நடவடிக்கை கன்ஃபார்ம்! அமைச்சர் வார்னிங்!!

தமிழகத்தில், பள்ளிக்கு வரும் மாணவர்களை, ஆசிரியர்கள் வேறு எந்த பணிகளுக்கும் பயன்படுத்தக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் வார்னிங் :

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு, விரைவில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக ஆசிரியர்கள் மாணவர்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். இது போக பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல், செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் குறித்த முக்கிய அறிவிப்பை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, படிப்பதற்காக பள்ளிக்கூடம் வரும் மாணவர்களை, ஆசிரியர்கள் வேறு எந்த வேலையும் செய்ய சொல்லி வற்புறுத்தக் கூடாது எனவும், இதையும் மீறி மாணவர்களை சொந்த வேலையில் ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

பொதுமக்களே உஷார்.., கோவில் பெயரில் போலி இணையதளம்.., பணத்தை இழந்த பக்தர்கள் கதறல்!!!

ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் கழிவறைகளை சுத்தம் செய்தல், ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலையை செய்ய சொல்லி வற்புறுத்துதல் போன்ற குற்றச்சாட்டு எழுந்ததால், கல்வித் துறை இது போன்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த உத்தரவு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here