U19 T20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது.
U19 T20 உலக கோப்பை:
தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் முதல் சீசன் நடைபெற்று வருகிறது. இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் இந்த தொடரில், பங்கு பெற்று விளையாடி வந்தன. இதில் இந்திய அணி ஆரம்பம் முதலே வெற்றி எண்ணிக்கையை தொடங்கியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால், இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியது. நேற்று நடைபெற்ற இந்த உலக கோப்பைக்கான இறுதிப் போட்டியில், இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்திய அணி சார்பாக பந்து வீசிய அனைத்து வீராங்கனைகளும் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தனர். எளிதில் அடையக் கூடிய இலக்கை துரத்திய இந்திய அணி, 14 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில், சௌமியா திவாரி (24*), கோங்காடி த்ரிஷா (24) என சிறப்பாக விளையாடி இருந்தனர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி, U19 டி20 உலக கோப்பையின் முதல் சீசனை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்து உள்ளது.