நடிகர் ஜூனியர் என் டி ஆர் ஹாலிவுட் படங்களில் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜூனியர் என் டி ஆர்:
திரையுலகில் நடிகர், நடன கலைஞர் மற்றும் பின்னணி பாடகர் என்ன பன்முக திறமைகளை கொண்டவர் தான் நடிகர் ஜூனியர் என்டிஆர். இவர் நடிப்பில் வெளியான டெம்பர், பிருந்தாவனம், சக்தி போன்ற திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இதனைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த RRR படத்தில் ராம் சரணுடன் நடித்திருந்தார். சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதுமட்டுமன்றி இந்த விருதை பெற்றதற்காக படக்குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு நிகழ்ச்சியில் ராஜமவுலி, ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது மேடையில் பேசிய ஜூனியர் என்டிஆர் ஹாலிவுட்டில் பிரபலமான மார்வெல் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது என்று பேசினார். அதிலும் மார்வெல் படங்களில் வரும் அயன் மேன் தான் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்று கூறினார்.
மதுர, தம் படத்தில் நடித்த ரக்ஷிதா நியாபகம் இருக்கா?? இப்போ எப்படி ஆகிட்டாங்க தெரியுமா??
இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவன நிர்வாகி விக்டோரியா அலோன் சோவாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இப்படி திடீரென மார்வெல் ஸ்டுடியோஸ் நிர்வாகி உடன் ஜூனியர் என்டிஆர் பேசியதை பார்க்கும் பொழுது ஹாலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.