IND vs NZ: கடைசி நேரத்தில் மாஸ்டர் பிளானை செயற்படுத்திய இந்தியா…, வெற்றிக்கு பின் உள்ள ரகசியம் இதுதான்!!

0
IND vs NZ: கடைசி நேரத்தில் மாஸ்டர் பிளானை செயற்படுத்திய இந்தியா..., வெற்றிக்கு பின் உள்ள ரகசியம் இதுதான்!!
IND vs NZ: கடைசி நேரத்தில் மாஸ்டர் பிளானை செயற்படுத்திய இந்தியா..., வெற்றிக்கு பின் உள்ள ரகசியம் இதுதான்!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மாஸ்டர் பிளானை செயற்படுத்தி கடைசி நேரத்தில் வெற்றி பெற்றதற்கு இதுதான் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

IND vs NZ:

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியை விளையாடியது. இந்த போட்டியில், சுப்மன் கில்லின் அதிரடியான இரட்டை சதத்தால் இந்திய அணி, 349 ரன்கள் என்ற உயர்ந்த ஸ்கோரை அடைந்திருந்தது. சற்று கடினமான இந்த இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, 28.4 ஓவரிலேயே 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

7 வது விக்கெட் இழப்புக்கு மிட்செல் சான்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடி 162 ரன்கள் சேர்த்தனர். இதில், மிட்செல் சான்ட்னர் 57 ரன்களில் வெளியேற, ஹென்றி ஷிப்லி (0), லாக்கி பெர்குசன் (8) என சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால், கடைசி விக்கெட்டுக்கு மைக்கேல் பிரேஸ்வெல் மட்டும் போராடி வந்தார். இவரது, விக்கெட்டை கைப்பற்ற இந்தியாவின் ஷர்துல் தாக்கூர் டெத் ஓவரை வீசினார்.

இரட்டை சதத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்…, டாப் 10 பட்டியல் இதோ!!

முதல் பந்தில் சிக்ஸரை விட்டுகொடுத்த இவர், 2 வது பந்தை (பிட்சில் குத்தி பவுன்ஸ்ஸாக) wide ஆக வீசினார். அடுத்த பந்தும் பவுன்ஸ்ஸாக தான் வரும் என எண்ணிய பேட்ஸ்மேன், சிக்ஸருக்கு பறக்க விட ரெடியாக இருந்தார். ஆனால், தாக்கூரோ தரமான யாக்கர் வீசி மைக்கேல் பிரேஸ்வெல் எல்பிடபிள்யூ ஆகி விக்கெட்டை கைப்பற்றினர். முதல் இரண்டு பந்தில் யூகத்தை செட் செய்த தாக்கூர் 3 வது பந்தில் தனது திட்டத்தை செயல் படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி நேரத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here