குற்றாலத்தில் குளிக்க பக்கதர்களுக்கு தடை.., அவதியுறும் சுற்றுலா பயணிகள்.., வெளியாகிய முக்கிய அறிவிப்பு!!

0
குற்றாலத்தில் குளிக்க பக்கதர்களுக்கு தடை.., அவதியுறும் சுற்றுலா பயணிகள்.., வெளியாகிய முக்கிய அறிவிப்பு!!
குற்றாலத்தில் குளிக்க பக்கதர்களுக்கு தடை.., அவதியுறும் சுற்றுலா பயணிகள்.., வெளியாகிய முக்கிய அறிவிப்பு!!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில்கடந்த சில நாட்களாக மிதமான மழை பதிவாகி வருகிறது. கடந்த 2 தினங்களாக தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை விட்டு விட்டு பெய்ததால் குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி போன்ற அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் குளிக்க நேற்று இரவு முதல் தடை செய்யப்பட்டது. தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து வருவதால் மெயின் அருவியை தவிர மற்ற அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் தடையின்றி குளிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது.

தமிழக மக்களே உஷார்., இதை மட்டும் மறந்தும் செஞ்சுடாதீங்க – டிஜிபி சைலேந்திரபாபு அட்வைஸ்!!

மேலும் வெள்ளப்பெருக்கெடுத்து தண்ணீர் வருவதால் கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் போன்ற அணைகள் நிரம்பி வழிகிறது. இதையடுத்து பாசன வசதி பெரும் விவசாய நிலங்களில் நெல் நடவுப்பணி தீவிரமடைந்து வருகிறது. அணைகள் நிரம்பியதால் நெல் மற்றும் கரும்பு விவசாயிகளும், குளிக்க தடை நீங்கியதால் ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here