டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றின் முடிவில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.
டி20 உலக கோப்பை 2022:
டி20 உலக கோப்பை தொடரில் நேற்றுடன் சூப்பர் 12 சுற்றுகள் முடிந்த நிலையில், குரூப் 1ல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணியும், குரூப் 2வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தகுதி சுற்று போட்டிகள் வரும் 9 மற்றும் 10 ம் தேதிகளில் நியூசிலாந்து – பாகிஸ்தான் மற்றும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில், இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில், அதிக ரன் மற்றும் விக்கெட் எடுத்தவர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் விராட் கோஹ்லி 246, நெதர்லாந்தின் மேக்ஸ் ஓ டவுட் 242 மற்றும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 225 ரன்களுடன் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
புனேரி பல்டனுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் திரில் வெற்றி…, புள்ளி பட்டியலில் முன்னேறி அசத்தல்!!
இதனை தொடர்ந்து, அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களுக்கான பட்டியல் முதல் மூன்று இடங்களில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா 15, நெதர்லாந்தின் பாஸ் டி லீடே 13 மற்றும் ஜிம்பாப்வேயின் முசரபானி 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். இந்த பட்டியலில், இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 10 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் 9 வது இடத்தில் உள்ளார்.