புனேரி பல்டனுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் திரில் வெற்றி…, புள்ளி பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

0
புனேரி பல்டனுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் திரில் வெற்றி..., புள்ளி பட்டியலில் முன்னேறி அசத்தல்!!
புனேரி பல்டனுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் திரில் வெற்றி..., புள்ளி பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்று, புள்ளி பட்டியலில் 3 மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

புரோ கபடி:

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று தமிழ் தலைவாஸ் அணி புனேரி பல்டன் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால் ஆட்டம் ஆனது விறுவிறுப்பாக அரங்கேறியது. இதில், வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, புனேரி பல்டன் 34 புள்ளிகள் எடுக்க, தமிழ் தலைவாஸ் 35 புள்ளிகளை எடுத்து வெற்றியை உறுதி செய்தது. இதில், தமிழ் தலைவாஸின் நரேந்தர் 13 புள்ளிகளை எடுத்து அசத்தியுள்ளார். இந்த வெற்றி மூலம், தமிழ் தலைவாஸ் தொடர்ந்து 3 போட்டிகளை கைப்பற்றியதோடு, 11 போட்டிகளில் 5 ல் வெற்றி, 2ல் டிரா மற்றும் 4 ல் தோல்வி அடைந்து 33 புள்ளிகளுடன் 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதே போன்ற மற்றொரு ஆட்டத்தில், யு மும்பா எதிர்த்து விளையாடிய பாட்னா பைரேட்ஸ் அணி 34 – 31 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம், 10 போட்டிகளில், 4ல் வெற்றி, 4ல் தோல்வி மற்றும் 2ல் டிரா செய்து 28 புள்ளிகளுடன் 10 வது இடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here