இந்தியன் சூப்பர் லீக் தொடரில், சென்னையின் FC அணி ஈஸ்ட் பெங்கால் அணியை ஒரு கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியன் சூப்பர் லீக்:
இந்தியன் சூப்பர் லீக்கின் 9 வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், சென்னையின் FC அணியை எதிர்த்து ஈஸ்ட் பெங்கால் அணி தனது சொந்த மண்ணான கொல்கத்தாவில் போட்டியிட்டது. ஆட்டத்தின் முதல் பாதி வரையிலும் இந்த இரு அணிகளும் ஒரு கோலுக்காக முயற்சித்து வந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனாலும், இரு அணிகளும் முதல் பாதியில் கோல் இல்லாமல் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில், சென்னை அணியின் வஃபா ஹகமானேஷி 69 வது நிமிடத்தில் அணியை முன்னிலை பெற வழி செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈஸ்ட் பெங்கால் அணி முயற்சித்து மட்டுமே வந்தது.
FIH புரோ லீக்: எதிரணியை மிரட்டிய இந்திய வீரர்கள்…, நியூசிலாந்து எதிராக அசத்தல் வெற்றி!!
இதனால் ஆட்டத்தின் இறுதியில், சென்னையின் FC 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது. தனது சொந்த மண்ணில் ஈஸ்ட் பெங்கால் அணி தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதில் பெற்ற வெற்றியின் மூலம், சென்னையின் FC இந்த லீக்கில் 4 போட்டிகளில் 2ல் வெற்றி, தலா ஒரு போட்டியில் தோல்வி மற்றும் டிரா செய்து 7 புள்ளிகளுடன் 11 அணிகள் கொண்ட பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.