FIH புரோ லீக்: எதிரணியை மிரட்டிய இந்திய வீரர்கள்…, நியூசிலாந்து எதிராக அசத்தல் வெற்றி!!

0
FIH புரோ லீக்: எதிரணியை மிரட்டிய இந்திய வீரர்கள்..., நியூசிலாந்து எதிராக அசத்தல் வெற்றி!!
FIH புரோ லீக்: எதிரணியை மிரட்டிய இந்திய வீரர்கள்..., நியூசிலாந்து எதிராக அசத்தல் வெற்றி!!

FIH புரோ லீக்கில் நியூசிலாந்து அணியை மிரட்டிய இந்தியா வீரர்களின் அசத்தலான கோல்களால் அபாரமாக வெற்றி பெற்றது.

FIH புரோ லீக்:

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் FIH புரோ லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் வேகம் காட்ட ஆரம்பித்தனர். குறிப்பாக, நியூசிலாந்து அணி 2, 9 மற்றும் 14 ஆகிய நிமிடங்களில் மூன்று கோல் அடித்து அசத்தினர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க இந்தியாவும், 7, 17, 19, 31 மற்றும் 38 ஆகிய நிமிடங்களில் ஹர்மன்பிரீத் சிங், செல்வம் கார்த்தி மற்றும் ராஜ் இணைந்து 5 கோல்கள் அடித்து எதிரணியை அச்சுறுத்தினர். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில், இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

T20 WC 2022 SL vs ENG: ஆவலோடு காத்திருக்கும் ஆஸ்திரேலியா…, அரையிறுதிக்குள் நுழைய போவது யார்??

இதனை தொடர்ந்து, ஆட்டத்தின் 2வது பாதியிலும், இந்திய வீரர்களான சுக்ஜீத் சிங் மற்றும் ஜுக்ராஜ் சிங் ஆதிக்கம் செலுத்தி இரண்டு கோல் அடித்து அசத்தினர். இதன் விளைவால், இந்த போட்டியில் இந்திய அணி 7-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, 2 வது வெற்றியை பதிவு செய்தது. அடுத்ததாக இந்திய அணி நாளை ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here