கோலி ரொம்பவே திறமைசாலி.., எல்லாத்துக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டாரு.., நியூசிலாந்து வீரர் ஓபன் டாக்!!

0
கோலி ரொம்பவே திறமைசாலி.., எல்லாத்துக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டாரு.., நியூசிலாந்து வீரர் ஓபன் டாக்!!
கோலி ரொம்பவே திறமைசாலி.., எல்லாத்துக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டாரு.., நியூசிலாந்து வீரர் ஓபன் டாக்!!

இந்திய வீரர் விராட் கோலி விளையாடும் விதம் பற்றி நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

விராட் கோலி

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கடந்த சில வருடங்களாக மோசமான பார்மில் விளையாடி வந்தார். இதனால் பலரது விமர்சனத்திற்கும், கேலிக்கும் விராட் கோலி ஆளானார். ஆனால் இதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது பார்மை மீட்டெடுப்பதிலே கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடி கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது 71 சதத்தை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறும் உலக கோப்பை தொடருக்காகவும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர், விராட் கோலி பற்றி சில முக்கிய விஷியங்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது விராட் ஒரு திறமையான வீரர் என்றும் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தன் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றும் ராஸ் டெய்லர் கூறியுள்ளார். மேலும் உலக கோப்பை நெருங்கி வரும் சூழலில் அவர் பார்முக்கு திரும்பியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here