விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில், நடந்துள்ள மிக முக்கியமான மாற்றம் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
வைரல் அப்டேட்:
விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் 6 வருகிற அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கும் என, சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான 2 கட்ட ப்ரோமோக்கள், ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. தற்போது, பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேர மாற்றம் குறித்த முக்கிய அப்டேட் இணையத்தில் வெளிவந்துள்ளது. அதாவது, இந்த சீசன் பிக்பாஸ் 6 திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம்.
பாட்டியான நடிகை காஜல் அகர்வால் – இந்த டுவிஸ்ட நாங்க கனவுல கூட நினைக்கல! எல்லாமே புதுசு பா!!
அதேபோல் கமல் கலந்து கொள்ளும் வாரத்தின் இறுதி நாள் நிகழ்ச்சி, இரவு 9:30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், இதற்கு முன் வரை ஒழுங்காக தானே போய்க் கொண்டிருந்தது. ஏன் இந்த திடீர் நேரம் மாற்றம்? அதைப் பார்த்துட்டு நாங்க எப்ப தூங்குறது? என கடுப்பாகி கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.