சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வம்சம் சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ரேஷ்மா. இந்த சீரியலை தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளும் ரேஷ்மாவிற்கு வந்து குவிந்தன. அதாவது, ரேஷ்மா நடித்த வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது.
இதற்கு முதல் திரைப்படத்திலேயே இவரது கதாபாத்திரம் நல்ல ஹிட்டை கொடுத்தது. இதன் பின்பு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எக்கச்சக்கமான ரசிகர்களின் கூட்டங்களை சம்பாதித்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் கூட தனக்கென தனிப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். அவ்வப்போது ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம், போட்டோஷூட் என புகைப்படம் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது சேலையில் நச்சுனு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.