ஓங்கி அறைஞ்சிடுவேன் – பொங்கிய வனிதா விஜயகுமார்! முதல் கணவருக்கு பிறந்த மகன் சர்ச்சை பேச்சு!!

0
ஓங்கி அறைஞ்சிடுவேன் - பொங்கிய வனிதா விஜயகுமார்! முதல் கணவருக்கு பிறந்த மகன் சர்ச்சை பேச்சு!!

சர்ச்சை பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், தனது முதல் கணவருக்கு பிறந்த தனது மகன் விஜய் ஸ்ரீஹரியை, ஓங்கி அறைந்து விடுவேன் என கடுமையாக சாடியுள்ளார்.

சாடிய வனிதா :

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம், எல்லோராலும் பெரிதாக பேசப்பட்டவர் வனிதா விஜயகுமார். இவருக்கும் சர்ச்சைக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருப்பது போல், அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்வார். அந்த வகையில் பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து, அது பாதியிலேயே முடிந்து போன கதை அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் வனிதா முதன்முதலாக ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து, அவரை பாதியிலேயே பிரிந்தார். இந்த தம்பதிக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற ஒரு மகன் உள்ளார். வளர்ந்து ஆளாகியுள்ள அவரிடம், ஒருவர் நீங்கள் வனிதா மகனா? என கேட்டார். அதற்கு இல்லை நான் ஆகாஷ் பையன் என விஜய் ஸ்ரீ ஹரி கூறினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை கேள்விப்பட்ட வனிதா, தன் மகன் வளர்ந்து விட்டானே தவிர, அறிவு என்பதே இல்லை. அவன் உடலில், எங்கள் குடும்பத்தின் ரத்தம் ஓடுகிறது. அதனால் தான் இப்படி பேசுகிறான். நேரில் பார்த்தால் ஓங்கி அறைந்து விடுவேன் என கடுமையாக விளாசினர். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here