தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.
முதல் பாடல்:
இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். அவரது மாஸ் நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் தன் வசம் வைத்துள்ளார். மேலும் ரசிகர்கள் பெரும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படம் வம்சி பைடிபைலி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விஜய் குடும்பக்கதை கலந்த ஆக்சன் திரைப்படத்தில் நடிப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வர இருக்கிறது.
கிடைத்த வாய்ப்பை அநியாயமாக தவற விட்ட சூர்யா.., அவருக்கு பதில் இனி இந்த மாஸ் நடிகர் தானாம்!!
இந்நிலையில் தளபதி படம் என்றாலே பாட்டுக்கு, டான்ஸ் -க்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி கண்டிப்பாக அவர் குரலில் ஒரு பாடலாவது பாடியிருப்பார். இந்நிலையில் தீபாவளி அன்று வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தீபாவளி என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பாடல் தளபதி பாடிய பாடலாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீபாவளி தளபதி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தீபாவளியாக இந்த தகவல் இருந்து வருகிறது.
#Diwali ?
— thaman S (@MusicThaman) September 8, 2022