ஆசிய கோப்பை2022.., எதிரணியின் வெற்றியை கொண்டாடிய இந்திய வீரர்.., ஆனாலும் உங்களுக்கு பெரிய மனசு தான்!!

0
ஆசிய கோப்பை2022.., எதிரணியின் வெற்றியை கொண்டாடிய இந்திய வீரர்.., ஆனாலும் உங்களுக்கு பெரிய மனசு தான்!!
ஆசிய கோப்பை2022.., எதிரணியின் வெற்றியை கொண்டாடிய இந்திய வீரர்.., ஆனாலும் உங்களுக்கு பெரிய மனசு தான்!!

ஆசிய கோப்பை தொடரில் இலங்கை வெற்றி பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் முன்னாள் வீரரும் வெற்றியை கொண்டாடி வருகிறார்.

வைரலாகும் வீடியோ!!

15 வது ஆசிய கோப்பை தொடருக்கான இறுதி ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி 6 வது முறையாக பட்டத்தை வென்று அசத்தியது. இதனால் இலங்கை அணி வீரர்களும், ரசிகர்களும் உற்சாகமாக வெற்றியை கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ஏனென்றால் கடைசியாக நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையாக இருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக இறுதி போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை வெளிப்படுத்தும் விதமாக மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் இலங்கை நாட்டு கொடியை கையில் வைத்து உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர்.

அப்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார். அதாவது கம்பீர் இந்திய அணி வீரராக இருந்தாலும் இலங்கை அணி வெற்றி பெற்ற உடன், இலங்கை நாட்டின் கொடியை கையில் எடுத்து அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்வை கம்பீர் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here