பழைய மெசேஜை ஈஸியா தேடி எடுக்கணுமா?? வந்தாச்சு வாட்ஸ் ஆப் -இல் சூப்பர் அப்டேட்.., குஷியில் பயனர்கள்!!

0
பழைய மெசேஜை ஈஸியா தேடி எடுக்கணுமா?? வந்தாச்சு வாட்ஸ் ஆப் -இல் சூப்பர் அப்டேட்.., குஷியில் பயனர்கள்!!
பழைய மெசேஜை ஈஸியா தேடி எடுக்கணுமா?? வந்தாச்சு வாட்ஸ் ஆப் -இல் சூப்பர் அப்டேட்.., குஷியில் பயனர்கள்!!

வாட்ஸ் ஆப் செயலியில் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும் என்றால் அதனைத் தேடிக் கண்டுபிடிப்பது சுலபமான விஷயம் இல்லை. தற்போது சுலபமாக அந்த செய்தியை தேடும்படியான புதிய அப்டேட் வெளியாக இருக்கிறது.

வாட்ஸ் ஆப் அப்டேட்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் நிறுவனம் கடந்த சில நாட்களாகவே அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. மேலும், இன்னும் சில நாட்களில் பல அப்டேட்களை வெளியிட வாட்ஸ் ஆப் நிறுவனம் தயாராக இருக்கிறது.

மேலும், வாட்ஸ் ஆப்-இல் பயனர்களின் விவரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படுவதால் பில்லியன் கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த பயனர்களின் வசதிக்காகவும் அவ்வப்போது பல அப்டேட்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், ஒரு வாட்ஸ்ஆப் அப்டேட் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, வாட்ஸ் ஆப்-இல் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை தேடுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், எளிமையாக செய்தியை தேடும் வகையில் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை எந்த தேதியில் அனுப்பினோம் என்கிற தேதியை Search செய்தாலே அந்த நாளில் அனுப்பிய அனைத்து செய்திகளும் வரும்படியான அப்டேட் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here