இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆண்கள் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அணியை அறிவித்துள்ளனர்.
பலம் வாய்ந்த தென்னாபிரிக்க அணி!
அடுத்த மாதம் அனைத்து அணிகளுக்கு இடையிலான T20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து அணி வீரர்களின் பட்டியலையும் அந்தந்த கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பட்டியலை CSA இன்று வெளியிட்டுள்ளது. இதில் இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நட்சத்திர வீரரான டெம்பா பவுமா இடம் பெறாதது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது கையில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக பங்கேற்க முடியவில்லை என CSA கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனாலும் இந்த கிரிக்கெட் நிறுவனம் திறமையான வீரர்களை அணியில் சேர்த்து பயிற்சி அளித்து வருகிறது. இதனால் டி20 உலக கோப்பை தொடரில் இந்த அணி மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தெரிகிறது. இந்த டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணியையும் CSA கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்கா ஒருநாள் அணி :
டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஜான்மேன் மலான், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், ஆண்டிலி ஃபெஹ்லுக்வே, ஆண்டிலி பெஹ்லுக்வே. ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.
T20 உலக கோப்பை தென்னாப்பிரிக்கா அணி :
டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரிலே, ரிலே, ரிலே டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.