‘கல்யாணம் பண்ணிக்காமல் குழந்தை பெத்துக்கலாம்’ அஜித் பட நடிகை பேச்சு – சமூகவலைத்தளத்தில் பரபரப்பு!

0
'கல்யாணம் பண்ணிக்காமல் குழந்தை பெத்துக்கலாம்' அஜித் பட நடிகை பேச்சு - சமூகவலைத்தளத்தில் பரபரப்பு!

பிரபல முன்னாள் நடிகை தபு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திருமணம் செஞ்சிக்காமலே கர்ப்பம் ஆகலாம் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை தபு:

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர் இதயத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை தபு. அந்த வரிசையில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தாயின் மணிக்கொடி, இருவர், சிநேகிதியே போன்ற திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. இதை தொடர்ந்து தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய பிளாக் பஸ்டர் திரைப்படமான கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் போலீஸாக நடித்து வருகிறார்.

நடிகை தபு பாலிவுட் படங்களில் ஆர்வம் கொண்டதால் தற்போது வரை பாலிவுட்டில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, “தற்போது எனக்கு 50 வயதை கடந்துள்ளது. எனக்கு தாய்மை அடைய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்காக கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.

தரமான சம்பவம்.. ரஜினியுடன் கைகோர்க்கும் கோலிவுட்டின் டாப் வில்லன் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் கர்ப்பமாக முடியும். அதே போல் நான் பிள்ளை பெற விரும்பினால், நான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வேன். குழந்தை பெறுவதற்கு வயது ஒன்றும் தடையே இல்லை” என தபு தெரிவித்துள்ளார். அவர் பேசியது குறித்து பாலிவுட் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here