தமிழ் சினிமா நாயகியான அமலா பால், தற்போது காடவர் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமலா பால்:
கோலிவுட் ரசிகர்களுக்கு மைனா படத்தின் மூலம் தெரிய வந்தவர் நடிகை அமலா பால். இவர் முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இதனால் இவருக்கு அடுத்தடுத்து நடித்து தமிழ் சினிமாவில் நீடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் நடித்த தெய்வத்திருமகள், தலைவா, சேட்டை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் காடவர் படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அண்மையில் கூட நண்பர் ஒருவர் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலா பால் காவல்துறையில் புகார் அளித்து இருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தற்போது சினிமா வாழ்வில் முக்கியத்துவம் கொடுத்து தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.