இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த நீச்சல் வீராங்கனை – 8 ஆம் இடம் பிடித்து அசத்தல்!

0
இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த நீச்சல் வீராங்கனை - 8 ஆம் இடம் பிடித்து அசத்தல்!
இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த நீச்சல் வீராங்கனை - 8 ஆம் இடம் பிடித்து அசத்தல்!

உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அபிக்ஷா பெர்னாண்டஸ் சிறப்பாக விளையாடி 8 ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்திய வீராங்கனை அபிக்ஷா!

தென் அமெரிக்காவில் உள்ள பெருவில் உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலக அளவில் இருந்து பல வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். மேலும் இந்த போட்டியில் இந்தியாவின் வீராங்கனை அபிக்ஷா பெர்னாண்டஸ் கலந்து கொண்டார். இந்நிலையில் இவர் மகளிருக்கான 200 மீட்டர் பட்டா்ஃப்ளை பிரிவில் பங்கேற்றார். இந்த தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பெர்னாண்டஸ் 2 நிமிடம்,19.14 வினாடியில் இலக்கை கடந்து 8 வது இடம் பிடித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போட்டியில் பந்தய துாரத்தை 2 நிமிடம், 18.39 வினாடியில் கடந்ததே சிறந்த ரெக்கார்ட் ஆக இருந்தது. இதனிடையே, ஆடவருக்கான 200 மீட்டா் ஃப்ரீஸ்டைல் ஹீட்ஸில் பிரிவில் இந்திய வீரர் சம்பவ் ராமா ராவ், தகுதிச் சுற்றில் 1 நிமிடம் 55.71 விநாடிகளில் இலக்கை எட்டி ஒட்டுமொத்தமாக 27வது இடம் பிடித்ததன் மூலம் பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தார். மேலும் மற்றொரு வீரர் வேதாந்த் தகுதி சுற்றிலே தனக்கான வாய்ப்பை தவறவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here