சமந்தா மாஜி கணவரின் மொத்த உழைப்பும் கிளோஸ் – படத்தின் ஹீரோ எடுத்த அதிரடி முடிவு!!

0
சமந்தா மாஜி கணவரின் மொத்த உழைப்பும் கிளோஸ் - படத்தின் ஹீரோ எடுத்த அதிரடி முடிவு!!

பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகி, கடந்த மாதம் வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் பெருத்த நஷ்டம் அடைந்து இருப்பதால், படத்தின் ஹீரோ அமீர்கான் முக்கிய நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளார்.

அமீர்கான் அதிரடி:

ஹாலிவுட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற, பாரஸ்ட் கோப் என்ற படத்தின்  இந்தி ரீமேக்  அண்மையில் தயாரானது. பாலிவுட் நடிகர் அமீர்கான், நடித்த இந்த படத்தில் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் கடந்த மாதம் 5 மொழிகளில் வெளியானது. 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், எதிர்பார்த்த அளவு ரீச் அடையவில்லை. இதனால், இந்த திரைப்படம் 100 கோடி வரை நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இழப்பை ஈடுகட்ட, படத்தில் நடித்த ஹீரோ அமீர்கான் தனக்கு சம்பளமாக ஒதுக்கப்பட்ட ரூ. 50 கோடியை வேண்டாம் என மறுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஹீரோவின் இந்த செயலுக்கு, தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here