சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் அண்ணாச்சி நடித்து அண்மையில் வெளியான தி லெஜண்ட் படத்தின் இறுதி வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தி லெஜண்ட் வசூல்:
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தனது கடையின் விளம்பர படத்தில் நடித்து அதன் மூலம் சினிமா துறையில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் லெஜண்ட் சரவணன் அருள் அண்ணாச்சி. விளம்பரங்களில் முதன் முதலில் பல நடிகைகளை வைத்து விளம்பர படத்தை எடுத்து அதில் நடித்தார். அதற்கு பிறகு நெட்டிசன்கள் மத்தியில் கலவை கலந்த வரவேற்பை பெற்ற போதிலும் தன்னிடம் உள்ள பண வசதியை கொண்டு தானே படத்தை தயாரித்து அவர் நடித்த படம் தான் தி லெஜண்ட்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கடந்த மாதம் வெளியாகிய தி லெஜண்ட் திரைப்படத்தின் இறுதி வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெறாவிட்டாலும் வசூலில் பணத்தை அள்ளி உள்ளது. அதாவது அருள் அவர்கள் நடித்த முதல் படமான தி லெஜண்ட் திரைப்படம் ரூ 12.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் புது முகத்துக்கு இவ்வளவு கோடி வசூலா என மக்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.