பிரபல சினிமா தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஆவார் ஏ.எல்.விஜய் இவர் இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். கடந்த 2007-ம் ஆண்டு அஜித் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்.அவர் அதற்கு பிறகு மதராஸப்பட்டினம், தெய்வத்திருமகள், விஜய்யின் தலைவா தேவி வனமகன் போன்ற பல படங்களை இயக்கியவர் இப்பொழுது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்னும் படமாக இயக்கி வருகிறார்
அமலா பாலுடன் விவாகரத்து
விஜய் விக்ரமுடன் இணைந்து இவர் இயக்கிய ‘தெய்வத்திருமகள்’ படத்திற்காக பல விருதுகளைக் குவித்த விஜய்க்கு அதனுடன் தமிழக அரசின் விருதுகளும் கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்த அமலா பாலை விஜய் காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று பின் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன அதனால் 2016ஆம் ஆண்டு பிரிந்தனர்.அதற்க்கு பின் பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2-வது திருமணத்திற்கு சம்மதித்து சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகளான ஐஸ்வர்யா எம்.பி.பி.எஸ் என்ற மருத்துவத்துறையை சேர்ந்த பெண்ணை 2019 ஜூலை மாதம் மணந்தார் விஜய்.
அப்பா ஆன ஏ எல் விஜய்
இன்று இயக்குநர் விஜய் – டாக்டர் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு சென்னையில் (30/05/2020) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர் என அவரது சகோதரர் ஆனா உதயா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்க்கு சினிமா பிரபலங்களை தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்,விஜய் தற்போது இயக்கி வருகிம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |