மலையாள சினிமாவில் வளரும் இளம் நடிகராக வலம் வந்தவர் சரத் சந்திரன். இவர் தீடிரென மரணடைந்த சம்பவம் திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரத் சந்திரன் திடீர் மரணம்:
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக திகழ்ந்தவர் சரத் சந்திரன். இவர் கேரளாவில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஜோஸ் பெல்லிசெரியின் அங்கமலி டைரிஸ் என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகினார்.
அதற்கு முன் ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார் இவர். தொடர்ந்து சில ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெறும் 37 வயதுடைய சரத் சந்திரன் திடீரென மரணமடைந்த சம்பவம் அவர் குடும்பத்தினரையும் மற்றும் திரையுலகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் மரணம் அடைய காரணம் என்ன என்று தற்போது வரை தெரியவில்லை. இதனால் மலையாள பட வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவருடைய இறுதி சடங்கு நாளை நடைபெறும் என சரத் சந்திரன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்